தொடரும் ரியல் எஸ்டேட் குற்றங்கள்



    தொடர்ந்து வரும் நில மோசடி குற்றங்கள்.....!  நில அபகரிப்பு சட்டம்  நடைமுறையில் இருந்தும் மோசடி  மன்னர்களால் போலி பத்திரப்பதிவு, போலி கையெழுத்து , போலி மருத்துவ சான்று என  நடந்து கொண்டுதான் இருக்கிறது.

   வேலூர் மாவட்டம் ஓச்சேரி அருகில் உள்ள களத்தூர் கிராமத்தில் வசிக்கும் நில தரகர்கள்  வசந்த் , சிவகுமார்  ,குட்டி என்கின்ற சுப்பிரமணி எனும் இம்மூவரால் பத்திரப்பதிவு மோசடி நடந்தேறியுள்ளது .


     பத்திரப்பதிவு துறையில் விஜிலன்ஸ் என்று ஒன்று உள்ளதா என்று கேள்வி எழுகிறது ? . இவர்கள் அதே ஊரில் பலரை ஏமாற்றியுள்ளனர், யாரும் புகார் தர முன்வருவதில்லை  காரணம், ஊர் கட்டுப்பாடு ,  கட்டப்பஞ்சாயத்து.

    களத்தூரில் பூர்வீகமாக வசித்து தற்போது காஞ்சிபுரம் நகரத்தில் வசிக்கும் கைலாசம் என்கின்ற முதியவரை நில மோசடி செய்துள்ளனர் . இம்மூவரில்  வசந்த் மற்றும் குட்டி  இருவரும் சிவகுமார் மீது பவர் அதிகாரம் செய்துள்ளனர். கைலாசத்திடம் நிலத்தை விற்றுத்தருவதாக சொல்லி , 31.3.2016 அன்று 21 சென்ட்டு  நிலத்திற்கு பவர் பெற்று 6 ஏக்கர் 56 சென்ட்டு பவர் அதிகார பத்திரப்பதிவு செய்து ஏமாற்றியுள்ளனர். 

  பிறகு காஞ்சிபுரத்திலுள்ள நிலத்தரகர் மூலம் சென்னையில் உள்ள ஒரு பெரும் புள்ளிக்கு  20.7.2016அன்று 4 ஏக்கர் 77 சென்ட்டு நிலத்தை  நில உரிமையாளருக்கு தெரிவிக்காமல் கிரயப்பத்திரப்பதிவு செய்து விற்றுள்ளனர் . நிலம் வாங்கியவர்க்கும், தரகர்களும் இடையே நில அளவிலும் பணம் பரிமாற்றத்திலும் பிரச்சனை வர இது நில உரிமையாளருக்கும் அவருடைய மகனுக்கும் தெரியவர நிலம்  கிரய ரத்து செய்துள்ளனர் . 

       இதில் 21 சென்ட்டு நிலத்திற்கு பதிலாக  6 ஏக்கர் 56 சென்ட்டு பவர் மோசடி, மருத்துவ  சான்றில் கையழுத்து மோசடி, ஆளில்லாமல்  ( Life Certificate) மருத்துவ  சான்று பெற்றது , இரண்டு  விலாசம் கொடுத்திருப்பது , வாரிசு சான்றில்  திருத்தங்கள் என ரியல் எஸ்டேட் குற்றங்கள் நடந்துள்ளது .

     இந்த நில மோசடி செய்தியை நமக்கு கொடுத்தவர்கள் புகார் கொடுக்கவும் சட்டத்தின் முன் வரவும் தயக்கம் காட்டுகின்றனர் .ஆனால் சட்ட நடவடிக்கை வேண்டும் என்பது அவர்கள் நோக்கம். இந்த நில மோசடியின் பின்னணியில் இருக்கும் கும்பல் யார் ? பெரும் புள்ளிகள் யராவது இருக்கிறார்களா ? என்று காவல்துறை உடனே கண்டுபிடிக்க வேண்டும் . அரசு பதிவுத்துறை விஜிலன்ஸ் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?அல்லது  ரியல் எஸ்டேட் குற்றங்கள்  தொடருமா?என்று பொறுத்திருந்து அடுத்து
வரும்  விசாரணையில்  பார்க்கலாம் .